ஆந்திர பிரதேச மந்திரியின் பாதுகாப்பு கார் மோதி கணவர் உயிரிழப்பு; மனைவி படுகாயம்
ஆந்திர பிரதேச கல்வி மந்திரியின் பாதுகாப்பு கார் ஒன்று பைக் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
பிரகாசம்,
ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் பெடரவீடு மண்டல் பகுதியில் கொப்புரு என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கல்வி மந்திரியின் பாதுகாப்பு கார் ஒன்று எதிர் திசையில் வந்த பைக் ஒன்றின் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் பைக்கில் பயணம் செய்த மகேஷ் (வயது 31) மற்றும் அவரது மனைவி மல்லேஸ்வரி படுகாயமடைந்தனர். எனினும், மகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். அவருடைய மனைவி கர்னூல் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து நடந்தபோது, காரில் மந்திரி இல்லை எனறும், கார் சர்வீஸ் செய்வதற்காக கொடுக்கப்பட்டு இருந்தது என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story