ஹெலிகாப்டர் விபத்து - பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெர் உடலுக்கு ராஜ்நாத் சிங் இறுதி மரியதை


ஹெலிகாப்டர் விபத்து -  பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெர் உடலுக்கு ராஜ்நாத் சிங் இறுதி மரியதை
x
தினத்தந்தி 10 Dec 2021 10:39 AM IST (Updated: 10 Dec 2021 11:04 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அதிகாரி பிரிகேடியர் எல்.எஸ்.லிட்டெர் உடலுக்கு ராஜ்நாத் சிங் இறுதி மரியதை செலுத்தினார்.

புதுடெல்லி,

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அதிகாரி பிரிகேடியர் எல்.எஸ் லிட்டெரின் உடலுக்கு டெல்லி கண்டோன்மென்ட்டில் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அதிகாரி பிரிகேடியர் எல்.எஸ் லிட்டெரின் உடலுக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி நரவனே, கடற்படை தளபதி, ஹரிகுமார், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். 

அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எல்.எஸ்.லிட்டெர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Next Story