பெற்றோரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பிபின் ராவத் மகள்கள்


பெற்றோரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பிபின் ராவத் மகள்கள்
x
தினத்தந்தி 10 Dec 2021 11:40 AM IST (Updated: 10 Dec 2021 1:43 PM IST)
t-max-icont-min-icon

ஜெனரல் பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் ஆகியோரின் மகள்கள் - கிருத்திகா மற்றும் தாரிணி - தங்கள் பெற்றோருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

புதுடெல்லி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து தீப்பிடித்தது.

இந்த கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியது.

விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் வெலிங்டனில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை முதல் அந்த ஆஸ்பத்திரிக்கு ராணுவ உயர் அதிகாரிகள் வந்தனர். மேலும் பாதுகாப்பிற்காக ராணுவ ஆஸ்பத்திரி முன்பு துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அங்கு முதல்-அமை

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட இறந்த 13 பேரின் உடல்கள் பெட்டியில் வைக்கப்பட்டு, அதன் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ டிரக்குகளில் ஏற்றப்பட்டன. இதையடுத்து இந்த ராணுவ டிரக்குகள், ஆஸ்பத்திரியில் காலை 10.30 மணிக்கு புறப்பட்டு எம்.ஆர்.சி. ராணுவ முகாமிற்கு வந்தது.

வீரர்களின் உடல்களை சுமந்து வந்த ராணுவ டிரக்குகளுக்கு முன் ராணுவ இசைக்குழு இசைத்தபடி வந்தனர். தொடர்ந்து முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி ஆகியோரது உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக இறக்கப்பட்டது. தொடர்ந்து 3 டிரக்குகளில் இருந்தும் 13 பேரின் உடல்கள் இறக்கப்பட்டு, எம்.ஆர்.சி. முகாமில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்தது.

இதில் முதல் வரிசையில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 4 பேரின் உடல்களும், அடுத்த வரிசைகளில் 9 பேரின் உடல்களும் வைக்கப்பட்டு இருந்தன. முதலில் ராணுவ உயர் அதிகாரிகள் 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர்கள், ராணுவ அதிகாரிகள்  மலர் வளையம் வைத்தும் மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

 முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்கள், நேற்று இரவு டில்லி சென்றடைந்தன.பிரதமர் உள்ளிட்டோர் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் ஒரு பிரிகேடியர் என மூன்று பேரின் உடல்களுக்கு, அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. மற்றவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்ட பின், இறுதிச் சடங்கிற்கு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள், இன்று காலை 11:00 மணிக்கு, டில்லி காமராஜர் மார்க் பகுதியில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு  உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.



உள்துறை மந்திரி அமித் ஷா, ஜெனரல் பிபின் ராவத்தின் இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

ஜெனரல் பிபின் ராவத் மற்றும் மதுலிகா ராவத் ஆகியோரின் மகள்கள் - கிருத்திகா மற்றும் தாரிணி - தங்கள் பெற்றோருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

மதியம் 2:00 மணிக்கு இறுதி ஊர்வலம் துவங்கும். மாலை 4:00 மணியளவில், பிரார் சதுக்கம் இடுகாட்டில், பிபின் ராவத், அவருடைய மனைவியின் உடல் எரியூட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச் சடங்குகளை 5/11 கோர்க்கா ரைபிள்ஸ் பிரிவு கவனித்து வருகிறது.

முழு அரசு மரியாதையுடன் இந்த இறுதிச் சடங்குகள் நடக்கும் என்று, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. மற்றவர்களுக்கு, ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட உள்ளது.

 இதே பிரார் சதுக்கம் இடுகாட்டில் இன்று (டிச.10) காலை 9:00 மணிக்கு பிரிகேடியர் லிட்டெரின் உடல் எரியூட்டப்பட உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Next Story