ஆந்திராவில் ஆற்றில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து சிறுமி உட்பட 5 பேர் பலி; 7 பேர் மீட்பு


ஆந்திராவில் ஆற்றில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து  சிறுமி உட்பட 5 பேர்  பலி; 7 பேர் மீட்பு
x
தினத்தந்தி 10 Dec 2021 1:17 PM IST (Updated: 10 Dec 2021 1:17 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் ஷேர் ஆட்டோ கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.


ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சங்கம் கிராமத்தை சேர்ந்த சிலர் அருகே உள்ள சிவன் கோவிலுக்கு ஷேர் ஆட்டோவில் 12 பேர் சென்றுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கால்வாய் பாலத்தில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி ஒன்று ஷேர் ஆட்டோவில் மோதியது. 

இதில் ஷேர் ஆட்டோ பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு கால்வாய்க்குள் விழுந்தது. சம்பவம் குறித்து அறிந்த உள்ளூர் மக்கள் கால்வாய்க்குள் இறங்கி ஏழு பேரை மீட்டுள்ளனர்.  இந்நிலையில் மீட்கப்பட்ட ஏழு பேரில், 14 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இந்த விபத்தில் 5 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளதாக மாவட்ட நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாயமானவர்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Next Story