எல்லை பாதுகாப்பு படையினரின் அதிகார எல்லை விவகாரம் - போலீசாருக்கு மம்தா திடீர் உத்தரவு


எல்லை பாதுகாப்பு படையினரின் அதிகார எல்லை விவகாரம் - போலீசாருக்கு மம்தா திடீர் உத்தரவு
x
தினத்தந்தி 10 Dec 2021 2:55 PM IST (Updated: 10 Dec 2021 2:55 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காள மாநிலம் பூடான், நேபாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா, 

எல்லைப் பகுதிகளில்  பயங்கரவாதிகள்  நடமாட்டத்தைத் தடுக்க தேடுதலை மேற்கொள்வதற்காக, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் அசாமில் உள்ள சர்வதேச எல்லையில் இருந்து 15 கி.மீ.க்கு பதிலாக, 50 கி.மீ., தூரத்திற்குள் சந்தேகத்திற்கு இடமானவற்றைப் பறிமுதல் செய்யவும், சந்தேகத்திற்கிடமானவர்களை கைது செய்யவும் எல்லைப் பாதுகாப்புப் படைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், பிஎஸ்எப் சட்டத்தில் சமீபத்தில் மத்திய அரசு திருத்தம் செய்தது.  

ஆனால், மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்.  இந்த நிலையில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகார எல்லையை தாண்டி செயல்பட அனுமதிக்கக் கூடாது என மேற்கு வங்காள போலீசாருக்கு  அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.  மேலும்,  உங்களின் அனுமதி இல்லாமல்  எல்லை பாதுகாப்பு படையினர் கிராமப்பகுதிகளுக்குள் சென்றுவிடக்கூடாது. எல்லை பாதுகாப்பு படை அவர்கள் பணியை செய்யட்டும், நீங்கள் உங்கள் பணியை செய்யுங்கள்” என்றார். 

மேற்கு வங்காள மாநிலம் பூடான், நேபாளம், வங்காளதேசம் ஆகிய நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது. 

Next Story