உத்தர பிரதேசம், மராட்டியத்தில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்கள்: மத்திய அரசு
உத்தர பிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளத்தில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் முக்கிய ஆயுதமாக தடுப்பூசி உள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. நாடு முழுவதும் முழு வீச்சில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, சில இடங்களில் போலி தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும் செய்திகளும் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், மக்களவையில் இது தொடர்பாக இன்று கேள்வி முன்வைக்கப்பட்டது. இக்கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவார் கூறுகையில் , “
மராட்டியம், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது மத்திய அரசின் கவனத்துக்கு வந்தது. இது தொடர்பாக விரைவாக விசாரணை நடத்தி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
Related Tags :
Next Story