மராட்டிய மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி


மராட்டிய மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 10 Dec 2021 7:53 PM IST (Updated: 10 Dec 2021 7:53 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மும்பையில் 3 பேருக்கும், பிம்ப்ரி பகுதியில் 4 பேருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் 3 பேருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த 7 பேரில் 4 பேர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள் என்றும் ஒருவர் முதல் டோஸ் தடுப்பூசி மட்டும் செலுத்திக் கொண்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மராட்டிய மாநிலத்தில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story