பிபின் ராவத் போன்ற துணிச்சல் மிக்கவர்களால் நமது தேசியக்கொடி எப்போதும் உயரப்பறக்கும் - ஜனாதிபதி


பிபின் ராவத் போன்ற துணிச்சல் மிக்கவர்களால் நமது தேசியக்கொடி எப்போதும் உயரப்பறக்கும் - ஜனாதிபதி
x
தினத்தந்தி 11 Dec 2021 12:51 PM IST (Updated: 11 Dec 2021 12:51 PM IST)
t-max-icont-min-icon

பிபின் ராவத் போன்ற துணிச்சல் மிக்கவர்களால் நமது தேசியக்கொடி எப்போதும் உயரப்பறக்கும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.

டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள இந்திய ராணுட அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்றார். 

நிகழ்ச்சியில் பேசிய ராம்நாத் கோவிந்த், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று அதன் மரியாதை எப்போழுதும் பேணி பாதுகாக்கும் மறைந்த மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் போன்ற துணிச்சல் மிக்கவர்களால் நமது தேசியக்கொடி எப்போதும் உயரப்பறக்கும்’ என்றார்.    



நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story