காஷ்மீர் மக்களை வாக்கு வங்கியாகவே பயன்படுத்துகின்றனர்: பரூக் அப்துல்லா சொல்கிறார்
காஷ்மீர் மக்களை வாக்கு வங்கியாகவே அரசியல் கட்சிகள் பயன்படுத்தி வருவதாக அம்மாநில முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா விமர்சித்துள்ளார்.
ஜம்மு,
முன்னாள் முதல் மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா ஜம்முவில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காஷ்மீர் மக்கள் வெறும் வாக்கு வங்கியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளனர். பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
ஆனால், எதையுமே நிறைவேற்றவில்லை. காஷ்மீரில் உள்ள முஸ்லீம்களுக்கும், பண்டிட்களுக்கும் இடையே பிரச்சினைகள் தூண்டிவிடப்பட்டன. ஜம்மு காஷ்மீரில் இந்து - முஸ்லீம் இடையே உள்ள வெறுப்புணர்வின் மூலம் நமது எதிரிகளே பயன்பெறுவர்” என்றார்.
Related Tags :
Next Story