கேரளாவில் புதிதாக 3,795- பேருக்கு கொரோனா


கேரளாவில் புதிதாக 3,795- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 11 Dec 2021 7:29 PM IST (Updated: 11 Dec 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

இன்று தொற்று பாதிப்பு விகிதம் மீண்டும் 6 சதவீதத்தை தாண்டி அதாவது 6.50 சதவீதமாக உயர்ந்துள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,795- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 4,308- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்பு விகிதம் நேற்று 8 மாதங்களுக்கு பிறகு 6 சதவீதத்திற்கும் கீழ் குறைந்திருந்தது.  

ஆனால், இன்று தொற்று பாதிப்பு விகிதம் மீண்டும் 6 சதவீதத்தை தாண்டி அதாவது 6.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 58,344 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 38, 583- ஆக உள்ளது. 

கேரளாவில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 42,824- ஆக உயர்ந்துள்ளது.  மாவட்ட வாரியாக அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 681 பேருக்கும் எர்ணாகுளத்தில் 543- பேருக்கும் திரிசூர் மாவட்டத்தில் 445-பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Next Story