182- பயணிகளுடன் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்


182- பயணிகளுடன் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்
x
தினத்தந்தி 11 Dec 2021 9:39 PM IST (Updated: 11 Dec 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

கோரக்பூரில் இருந்து மும்பைக்கு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

நாக்பூர், 

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து மும்பைக்கு 182 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில், பயணம் செய்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு மருத்துவ அவசர தேவை ஏற்பட்டது. 

இதனால்,  விமானம் நண்பகல் 12.30 மணியளவில் நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக கர்ப்பிணி பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதையடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் மும்பைக்கு புறப்பட்டு சென்றது. 


Next Story