அசாமில் 8 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; 2 பேர் கைது


அசாமில் 8 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2021 3:31 AM IST (Updated: 12 Dec 2021 3:31 AM IST)
t-max-icont-min-icon

அசாமில் கடத்தலுக்காக வைத்திருந்த 8 கிலோ தங்கம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


கவுகாத்தி,

அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும்போது, கார்பி அங்லோங் மாவட்டத்தில் தில்லை என்ற பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான 2 பேர் போலீசாரின் சோதனையில் சிக்கினர்.

அவர்களிடம் நடந்த விசாரணையில், 49 தங்க கட்டிகள் அடங்கிய 8 கிலோ கடத்தல் தங்கம் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.  இதனை தொடர்ந்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story