வங்கி வைப்புத்தொகை காப்பீடு திட்டம்: பிரதமர் மோடி இன்று உரை
வங்கி டெபாசிட் காப்பீடு தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று நடைபெறும் ‘வங்கி வைப்புத்தொகை காப்பீடு திட்டம்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டெபாசிட் தொகை வைத்திருப்போர் முதலில்; ரூ.5 லட்சம் வரையிலான உத்தரவாதமான டெபாசிட் காப்பீடு தொகை’ என்னும் தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
பிரதமர் அலுவலகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
‘இந்தியாவில் செயல்படும் அனைத்து வணிக வங்கிகளிலும் இருக்கும் சேமிப்பு டெபாசிட், நிலையான டெபாசிட், நடப்பு டெபாசிட், தொடர் டெபாசிட் போன்ற அனைத்து டெபாசிட்களையும் இந்த காப்பீடு திட்டம் உள்ளடக்கியது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் மாநில, மத்திய மற்றும் முதன்மை கூட்டுறவு வங்கிகளில் உள்ள டெபாசிட்களும் உள்ளடக்கப்பட்டு உள்ளது.
மேலும், வங்கி டெபாசிட் காப்பீடு தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.’
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story