மராட்டியத்தில் மேலும் ஒருவருக்கு ‘ஒமைக்ரான்’: நாடு முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 37 ஆக உயர்வு
இந்தியாவில் ஒமைக்ரான் வைரசின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி உள்ளது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளதால் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது. இதனிடையே இத்தாலியில் இருந்து சண்டிகர் வந்த 20 வயது இளைஞருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் அவருக்கு ஒமைக்கரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.
இந்நிலையில் மராட்டியத்தில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாக்பூரில் 40 வயது ஆண் ஒருவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதன்படி இந்தியாவில் ஒமைக்ரான் வைரசின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. ( மராட்டியம் - 18, ராஜஸ்தான் - 9, டெல்லி - 2, குஜராத் - 3, ஆந்திரா -1, கர்நாடகா - 3 சண்டிகர் - 1 ).
Related Tags :
Next Story