ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ.5,000 ? கோவாவை கடவுள் காப்பாற்றட்டும் - ப.சிதம்பரம் டுவீட்


ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் ரூ.5,000 ?  கோவாவை கடவுள் காப்பாற்றட்டும் - ப.சிதம்பரம் டுவீட்
x
தினத்தந்தி 13 Dec 2021 8:30 AM IST (Updated: 13 Dec 2021 8:30 AM IST)
t-max-icont-min-icon

கோவாவில், திரிணமுல் காங்கிரஸின் கணக்கு பொருளாதார நோபல் பரிசுக்கு உகந்ததாக உள்ளது என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

கோவாவில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில்  40 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக திரிணமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 

அதைத் தொடா்ந்து, கிருஹலட்சுமி திட்டத்தின் கீழ் கோவாவில் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.5,000 வழங்கப்படும் என்று திரிணமுல் காங்கிரஸ் கோவா மாநில பொறுப்பாளரும் எம்.பி.யுமான மஹுவா மொய்த்ரா அறிவித்தாா்.

இதை விமா்சித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் கோவா மாநில தோதல் பொறுப்பாளருமான ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

திரிணமுல் காங்கிரஸின் கணக்கு பொருளாதார நோபல் பரிசுக்கு உகந்ததாக உள்ளது. கோவாவில் 3.5 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் ரூ5,000 வழங்கினால் மாதம் ரூ.175 கோடி செலவாகும். ஆண்டுக்கு ரூ.2,100 கோடி செலவாகும். கடந்த 2020 மாா்ச் மாத நிலவரப்படி, கோவாவின் கடன் நிலுவை ரூ.23,473 கோடியை ஒப்பிடும்போது, இது சிறிய தொகைதான். கோவாவை கடவுள் காப்பாற்றட்டும் அல்லது கடவுளை கோவா காப்பாற்றட்டும் என்று சிதம்பரம் கூறியுள்ளாா்.

இதையடுத்து, வாக்குறுதியளித்தபடி மக்களுக்கு உதவித்தொகை அளிக்க முடியும் என்று மஹுவா மொய்த்ரா பதிலளித்துள்ளாா். 

Next Story