நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் அஞ்சலி
2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் அஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லி,
இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி காலை 11.30 மணியளவில் 5 பயங்கரவாதிகள் திடீரென காருடன் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அப்போது பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் சுதாரித்துக் கொண்டு உடனடியாக பதிலடி கொடுத்தனர். இதில் 5 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இருந்தாலும், எட்டு பாதுகாப்புப்படையினர் மற்றும் ஒரு தோட்டக்காரர் என ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் ஜனநாயகம் என்று கருதப்படும் நாடாளுமன்ற மீது தாக்குதல் நடத்தியது பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பாராளுமன்ற தாக்குதல் தினத்தை முன்னிட்டு, இன்று பாராளுமன்றத்தில் வீரமரணம் அடைந்த வீரர்கள் படத்திற்கு மலர்தூவி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் அஞ்சலி செலுத்தினர். வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story