சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்
10-ம் வகுப்பு ஆங்கில தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுகிறது என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
10-ம் வகுப்பு ஆங்கில தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுகிறது எனவும் சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மார்க் வழங்கப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்ப்பு கிளம்பியதால் நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று சர்ச்சைக்குரிய கேள்வியை நீக்கியது சிபிஎஸ்இ.
பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்துகள் உள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில் சிபிஎஸ்இ நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மக்களவையில் வலியுறுத்தினார். மக்களவையில் இருந்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சிபிஎஸ்இ கல்வி வாரியத்தின் 10-ம் வகுப்பு தேர்வில் பெண்களை அவமதிக்கும் கருத்துகள் உள்ளாதாக சர்ச்சை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story