கொரோனாவை கையாண்டதில் மராட்டியம் முன்னோடி மாநிலம் - ஐகோர்ட்டு பாராட்டு
கொரோனா வைரஸ் தாக்குதலை கையாண்டதில் மராட்டிய அரசு முன்னோடி மாநிலமாக செயல்பட்டதாக அம்மாநில ஐகோர்ட்டு தெரிவித்தது.
மும்பை,
மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 700 என்ற அளவில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பான வழக்கு ஒன்று மராட்டிய ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி தீபன்ஹர் டாடா மற்றும் நீதிபதி கார்நிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பிரச்சினைகளை வெற்றிகரமாக கையாண்ட முன்னோடி மாநிலங்களில் மராட்டியமும் ஒன்று கூற எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. நில மாநிலங்களில் இன்னும் நேரடி கோர்ட்டு நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை.
நமது இணைந்த முயற்சி வெற்றிபெற்றுள்ளது. அந்த கருப்பு நாட்களை நாம் மறந்துவிடுவோம். ஆனால், நமது தரத்தை நாம் குறையவிடக்கூடாது. புத்தாண்டு புதிய தொடக்கத்தை கொண்டு வரும், 2021 ஏப்ரலை மீண்டும் பார்க்கக்கூடாது என நம்புவோம்’ என்றனர்.
Related Tags :
Next Story