சிபிஎஸ்இ தேர்வில் சர்ச்சை கேள்வி: ஆர்எஸ்எஸ்-பாஜக மேற்கொள்ளும் வழக்கமான உத்திதான் - ராகுல் காந்தி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Dec 2021 3:21 PM IST (Updated: 13 Dec 2021 3:22 PM IST)
t-max-icont-min-icon

இளைஞர்களின் மன உறுதியையும் எதிர்காலத்தையும் அழிக்க ஆர்எஸ்எஸ்-பாஜக மேற்கொள்ளும் வழக்கமான உத்திதான் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் ஆங்கிலத் தேர்வில் சிறுகுறிப்பில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு விடையளிப்பது போன்று இருந்தது. அதில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும் பாலின பாடுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பின. 

இந்த சூழலில் 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுவதாகவும், சர்ச்சைக்குரிய கேள்விக்கு பதிலளித்த அனைவருக்கும் மார்க் வழங்கப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.  

இந்நிலையில் இளைஞர்களின் மன உறுதியையும் எதிர்காலத்தையும் அழிக்க ஆர்எஸ்எஸ்-பாஜக மேற்கொள்ளும் வழக்கமான உத்திதான் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இதுவரை பெரும்பாலான சிபிஎஸ்இ தாள்கள் கடினமாகவே இருந்துள்ளன. ஆங்கிலத் தாளில் உள்ள புரிதல் பத்தி அருவருக்கத்தக்கதாக உள்ளது. இளைஞர்களின் மன உறுதியையும் எதிர்காலத்தையும் அழிக்க ஆர்எஸ்எஸ்-பாஜக மேற்கொள்ளும் வழக்கமான உத்திதான் இது. குழந்தைகளே, உங்களுடைய சிறந்த பங்களிப்பைச் செய்யுங்கள். கடின உழைப்பே பலன் தரும். வெறுப்புணர்வு அல்ல” என்று அதில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.




Next Story