பள்ளி, கல்லூரிகளில் பாலியல் பிரச்சினை: தடுக்க அரசின் திட்டங்கள் என்ன? கனிமொழி கேள்வி
பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளை தடுக்க மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி,
இதுகுறித்து மக்களவையில் கனிமொழி பேசியதாவது:
தற்போதைய சூழலில் கல்வி தான் பெண்களுக்கான ஆதாரமாக உள்ளது. ஆனால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் மீது ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து பத்திரிகை செய்திகளில் வெளிவருகின்றன.
இதை தடுக்க அரசின் திட்டங்கள், கொள்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். அப்போது தான் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார், "மாணவிகளை பாதுகாக்க பல்வேறு அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசு அளித்துள்ளது. மாநில அரசுகளும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story