ஒலா,ஸ்விக்கி ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு பலன்கள் ; மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்


ஒலா,ஸ்விக்கி ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு பலன்கள் ; மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
x
தினத்தந்தி 13 Dec 2021 12:22 PM GMT (Updated: 13 Dec 2021 12:22 PM GMT)

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பலன்கள் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில், செயலி (அப்) அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்களின் இந்திய கூட்டமைப்பு மனு தாக்கல் செய்தது.

புதுடெல்லி,

ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களான ஸ்விக்கி, ஸோமோட்டா மற்றும் டேக்சி நிறுவனங்களான ஓலா, உபேர், போன்றவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பலன்கள் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில்,  செயலி (அப்) அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்களின் இந்திய கூட்டமைப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.  

முன்னதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு அமைப்பு அல்லது அமைப்புசாரா தொழிலாளர்கள் என எந்த தொழிலாளர் சட்டங்களின் கீழும் சமூக பாதுகாப்பு பலன்கள் எதுவும் அளிக்கப்படவில்லை என வாதிட்டார். மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேண்டிய பலன்களை அளிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. இந்த வாதங்களை கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி எல். நாகேஷ்வர ராவ், மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story