காஷ்மீர்: பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் - 14 போலீசார் படுகாயம்


காஷ்மீர்: பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் - 14 போலீசார் படுகாயம்
x
தினத்தந்தி 13 Dec 2021 7:04 PM IST (Updated: 13 Dec 2021 7:04 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடில் 14 போலீசார் படுகாயமடைந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்ரீநகரின் பந்தா சவுக் பகுதியில் உள்ள ஜூவன் என்ற இடத்தில் போலீசார் ரோந்து வாகனம் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் ரோந்து வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 14 போலீசார் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்த போலீசாரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், தாக்குதல் நடைபெற்ற பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

Next Story