நடத்தையில் சந்தேகம்; திருமணமான 6 மாதத்தில் மனைவி தலைதுண்டித்து கொடூர கொலை - கணவன் வெறிச்செயல்
திருமணமான 6 மாதத்தில் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன் தனது மனைவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டம் மதிரன் பகுதியை சேர்ந்தவர் ராம்பால்(25). ஐ.டி. ஊழியரான இருவருக்கு முன்னர் பூனம் (27) என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் ஆனது. பூனம் தனியார் கிளினிக்கில் நர்ஸ்சாக வேலை செய்து வந்தார்.
இதற்கிடையில், திருமணம் ஆனது முதல் தனது மனைவி பூனம் நடத்தையில் கணவன் ராம்பால் சந்தேகம் இருந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு ராம்பால் தனது மனைவி பூனமை மதிரன் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ராம்பால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு மனைவியை கொடூரமாக குத்திக்கொலை செய்துள்ளார். மேலும், மனைவியின் தலையை துண்டித்த ராம்பால் அதை பையில் வைத்து யாருக்கும் தெரியாமல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாட்ஜை விட்டு தப்பியோடிவிட்டார்.
வெகுநேரமாகியும் அறையில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த லாட்ஜ் உரிமையாளர் காலை அறையை திறந்துள்ளார். அங்கு தலை துண்டிக்கப்பட்டு நிர்வாணமான நிலையில் பெண்ணின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொடூர கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தீவிர தேடுதல் வேட்டையில் லாட்ஜ் அமைந்துள்ள பகுதிக்கு அருகே ஒரு பை கிடந்ததை போலீசார் கைப்பற்றினர். அந்த பையில் இருந்த மருந்துச்சீட்டு மற்றும் அடையாள அட்டையை வைத்து உயிரிழந்தது பூனம் என்பதை உறுதி செய்தனர். மேலும், இந்த கொலை செய்தது அவரது கணவர் ராம்பால் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.
இதனை தொடர்ந்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய போலீசார் நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியை தலைதுண்டித்து கொலை செய்த கணவன் ராம்பாலை இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராம்பாலிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story