'பிரபஞ்ச அழகி' பட்டம் வென்ற ஹர்னாஸ் கவுர் சாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து


பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஹர்னாஸ் கவுர் சாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 13 Dec 2021 9:10 PM IST (Updated: 13 Dec 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

'பிரபஞ்ச அழகி’ பட்டம் வென்ற ஹர்னாஸ் கவுர் சாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் 2021-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக பங்கேற்றனர்.

இதில், இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் கவுர் 2021-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகி மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா வாகையை சூட்டினார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் கடந்த 2017-ம் ஆண்டு மிஸ் சண்டிகராக தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஹர்னாஸ் கவுர் சாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிரபஞ்ச அழகியாக பட்டம் வென்ற ஹர்னாஸ் சாந்துக்கு வாழ்த்துக்கள். மேலும், ஹர்னாசின் எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

Next Story