பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கோர வேண்டிய நேரம் வந்துவிட்டது -ராகுல் காந்தி


பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கோர வேண்டிய நேரம் வந்துவிட்டது -ராகுல் காந்தி
x
தினத்தந்தி 14 Dec 2021 3:20 PM IST (Updated: 14 Dec 2021 3:20 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கோர வேண்டிய நேரம் வந்துவிட்டது என ராகுல் காந்தி டுவிட் செய்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரியில்  விவசாயிகள் மீது கார் மோதிய சம்பவம், விவசாயிகளை கொல்ல திட்டமிட்ட சதி என சிறப்பு விசாரணைக்குக் குழு தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய மந்திரியின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை முயற்சி உள்பட மேலும் சில குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் சிறப்பு விசாரணைக்கு குழு தெரிவித்துள்ளது.  மேலும், ஆஷிஷ் மிஸ்ரா மீதான குற்றச்சாட்டுகளை மாற்றியமைக்க வேண்டும் எனவும் வழக்கை விசாரிக்கும் போலீசார், நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த நிலையில், இந்த தகவலை சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடி மீண்டும் மன்னிப்பு கோர வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார். மேலும், வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சரை முதலில் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தனது டுவிட் பதிவில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். 


Next Story