விவசாயிகளுக்கு எதிரான மனநிலையில் பிரதமர் மோடி ; பிரியங்கா காந்தி விமர்சனம்
விவசாயிகளுக்கு எதிரான மனநிலையில் பிரதமர் மோடி இருப்பதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
லகிம்பூர் கேரி வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என சிறப்பு விசாரணைக்குழு அறிக்கை அளித்துள்ள நிலையில், பிரதமர் மோடி விவசாயிகளுக்கு எதிரான மன நிலையுடன் இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: நீதிமன்றத்தின் கண்டனத்தாலும் சத்யாகிரக போராட்டத்தாலும், தற்போது போலீஸ் கூட மந்திரியின் மகன் சதித்திட்டத்துன் விவசாயிகள் மீது காரை ஏற்றியதாக கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் மந்திரியின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும். பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு எதிரான மனநிலயில் உள்ளதால், மந்திரியை இன்னும் பதவியில் இருந்து தூக்கவில்ல” எனப்பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story