மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிய இளம் பெண் கொலை - திடுக்கிடும் தகவல்
மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிய இளம் பெண்ணை பெயிண்டர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி,
டெல்லி ஃபரிதாபாத் பகுதியை சேர்ந்தவர் ஆசிப் (29). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதற்கிடையில், அஜ்மல் கான் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் ஆசிப் பெயிண்டிங் வேலை செய்துவந்துள்ளார்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் 20 வயது நிரம்பிய இளம் பெண் வீட்டுவேலை செய்துவந்துள்ளார். வீட்டுவேலை செய்யும் அந்த இளம்பெண்ணுக்கும், அதே அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டிங் வேலை செய்து வந்த ஆசிப்பிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பெண்டிங் வேலை செய்துவந்த ஆசிப்பிற்கு அந்த இளம்பெண் டீ, உணவு உள்ளிட்டவை கொடுத்துள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. ஆசிப் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆன தகவலை அந்த இளம்பெண்ணிடம் இருந்து மறைத்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த 9-ம் தேதி அந்த இளம்பெண் இரவு பணியை முடித்து விட்டு வீடு திரும்பவில்லை. இது குறித்து, இளம்பெண்ணின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் கடந்த 12-ம் தேதி ஃபரிதாபாத்தில் உள்ள சூரஜ்கண்ட் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அந்த இளம்ப்பெண்ணின் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் 9-ம் தேதி இரவு பணியை முடித்து விட்டு அந்த இளம்பெண் ஒரு ஆண் நபருடன் இனிப்பு கடையில் கேக் வாங்கி விட்டு சென்றது தெரியவந்தது.
சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் அந்த ஆண் நபர் ஆசிப் என்பது தெரியவந்தது. உடனடியாக ஆசிப்பை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தனக்கு திருமணமான தகவலை அந்த இளம்பெண்ணிடம் இருந்து ஆசிப் மறைத்துள்ளார். மேலும், அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த 9-ம் தேதி அந்த இளம்பெண்ணை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு ஃபரிதாபாதில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு சென்றுள்ளனர். அங்கு தனக்கு ஏற்கனவே திருமணமானதை ஆசிப் அந்த இளம் பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனது முதல் மனைவியை நாளையே விவாகரத்து செய்துவிட்டு உன்னை திருமணம் செய்துகொள்வதாக அந்த இளம் பெண்ணிடம் ஆசிப் கூறியுள்ளார். பின்னர் அந்த நாள் இரவு அந்த விடுதில் தங்கிய இருவரும் மறுநாள் விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
தனது முதல் மனைவியை விவாகரத்து செய்வதாக கூறிவிட்டு சென்ற ஆசிப் விவாகரத்துக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. மாறாக, அந்த இளம்பெண்ணை தீர்த்துக்கட்ட ஆசிப் முடிவு செய்துள்ளார். அதற்காக, அந்த இளம்பெண்ணை சூரஜ்கண்ட் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
அப்போது, தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை மேலும் தன்னை திருமணம் செய்வதற்கு ஆசிப் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என அந்த இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு அந்த இளம்பெண்ணை ஆசிப் தாக்கியுள்ளார்.
இதில் ஏற்பட்ட மோதலில் கத்தி கிழே விழுந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த இளம் பெண் அணிந்திருந்த துப்பட்டாவால் அந்த இளம் பெண்ணின் கழுத்தை நெரித்து ஆசிப் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இளம் பெண்ணை கொலை செய்த பின்னர் உடலை அந்த காட்டுப்பகுதியில் விட்டுவிட்டு எதுவும் தெரியாதது போல் வழக்கம் போல பெயிண்டிங் வேலைக்கு வந்துள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததையடுத்து ஆசிப் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story