டெல்லியில் புதிதாக 45 பேருக்கு கொரோனா


டெல்லியில் புதிதாக 45 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 Dec 2021 9:41 PM IST (Updated: 14 Dec 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 0.09 சதவிகிதமாக உள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 45 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 31 பேர் குணம் அடைந்துள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  14,41,793- ஆக உயர்ந்துள்ளது.

 தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை  14,16,286- ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25,100 ஆக உள்ளது.  தொற்று பாதிப்பைக் கண்டறிய 48,120- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் தொற்று பாதிப்பு விகிதம் 0.09 சதவிகிதமாக உள்ளது. 

Next Story