வேளாண் திட்டங்களால் பலன் பெறும் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் - நரேந்திர சிங் தோமர் தகவல்


வேளாண் திட்டங்களால் பலன் பெறும் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் - நரேந்திர சிங் தோமர் தகவல்
x
தினத்தந்தி 15 Dec 2021 1:42 AM IST (Updated: 15 Dec 2021 1:42 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் நலத்திட்டங்களால் பலன் பெற்று வரும் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் உருவாக்கப்படும் என நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்விக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 9-ந்தேதிப்படி, பிரதமர்-விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் மொத்தம் 11 கோடியே 64 லட்சம் விவசாயிகள் பயனாளிகளாக பதிவு செய்து கொண்டுள்ளனர். இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களில் பலனடைந்து வரும் விவசாயிகளுக்கென தனித்துவ அடையாள எண் உருவாக்கப்படும். 

அந்த எண்ணை பயன்படுத்தி, அவர்கள் பலனடைந்து வரும் அனைத்து வேளாண் திட்டங்களிலும் அவர்களது சுய விவரங்கள் இணைக்கப்படும். இதன்மூலம் வேளாண் நலத்திட்டங்களை பெற ஒவ்வொரு துறைக்கும் சென்று ஆவணங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியது இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story