மேற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு பாரம்பரிய அந்தஸ்து..


மேற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு பாரம்பரிய அந்தஸ்து..
x
தினத்தந்தி 16 Dec 2021 6:23 AM IST (Updated: 16 Dec 2021 6:23 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜை உலக பாரம்பரிய அந்தஸ்தை பெற்று இருக்கிறது. இதை யுனெஸ்கோ நேற்று அறிவித்தது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தின் மிக முக்கிய பண்டிகையான துர்கா பூஜை, ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை பீகார், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இந்த சிறப்பு மிக்க பண்டிகை தற்ேபாது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய அந்தஸ்தையும் பெற்று இருக்கிறது. இதை யுனெஸ்கோ நேற்று அறிவித்தது.

இது குறித்து அந்த அமைப்பு தனது டுவிட்டர் தளத்தில், ‘கொல்கத்தாவின் துர்கா பூஜை, உலக பாரம்பரிய அந்தஸ்து பட்டியலில் பொறிக்கப்பட்டு உள்ளது. வாழ்த்துகள் இந்தியா.’ என கூறியுள்ளது.

துர்கா பூஜை மிகப்பெரிய சிறப்பை பெற்றிருக்கும் இந்த தகவல் மேற்கு வங்காள மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. வங்காளத்துக்கு இது பெருமை மிக தருணம் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதைப்போல பிரதமர் மோடியும் யுனெஸ்கோ அறிவிப்பை வரவேற்று உள்ளார். யுனெஸ்கோவின் இந்த அறிவிப்பு, ஒவ்வொரு இந்தியனுக்கும் மிகவும் பெருமை மற்றும் மகிழ்ச்சியான விஷயம் என அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Next Story