டெல்லி: தேசிய போர் நினைவுசின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை
பாகிஸ்தான் உடனான போரில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி,
1971-ம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி ‘விஜய் திவஸ்' (வெற்றி தினம்) கொண்டாடப்படுகிறது. வங்காள தேசம் என்ற புதிய சுதந்திர தேசம் உருவாக வழிவகுத்ததும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போர்தான்.
1971-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி அன்று வங்காளதேசம் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. அன்றில் இருந்து இன்று வரையிலும் இந்தியாவுடன், வங்காளதேசம் நட்புறவுடன் உள்ளது. நன்றி உணர்வுடன் இந்தியாவை போற்றி வருகிறது. பிரிவினையை விதைத்த பாகிஸ்தானோ தொடர்ந்து இந்தியாவிடம் எதிரி என்ற போக்கையே கடைப்பிடித்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தை மண்ணை கவ்வச்செய்த தினத்தை, அதாவது டிசம்பர் 16-ந் தேதியை வங்காளதேசம் சுதந்திர தினமாகவும், இந்தியா அந்த போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் `விஜய் திவஸ்’ என்ற பெயரில் வெற்றி தினமாகவும் கொண்டாடுகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் உடனான போரின் பொன்விழா வெற்றி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
Related Tags :
Next Story