மும்பையில் அசந்து தூங்கிய லோடுமேன்... கண்விழிக்கும் போது அபுதாபியில் இருந்தார்
லக்கேஜ்களை விமானத்தில் வைத்த பின் அசந்து தூங்கிய லோடுமேன் அபுதாபியில் தரையிறங்கியுள்ளார்.
மும்பை ,
விமானத்தில் வைக்கப்படும் பயணிகளின் லக்கேஜ்களை கையாளும் லோடுமேன் அசதியில் சரக்கு பெட்டியிலே தூங்கியதால் அபுதாபி வரை சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று மும்பை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் ஒன்று அபுதாபிக்கு சென்றது. இந்த விமானம் புறப்படுவதற்கு முன்னர் அந்த விமான நிலையத்தில் லோடுமேனாக பணியாற்றும் ஒருவர் பயணிகளின் லக்கேஜ்களை சரக்கு பெட்டியில் ஏற்றி வைக்க சென்றுள்ளார். லக்கேஜ்களை விமானத்தில் வைத்த பின் அவர் அசதியில் அதே விமானத்தில் தூங்கியுள்ளார்.
விமானம் புறப்பட்டதும் சரக்கு பெட்டி பகுதியில் இருந்ததை உணர்ந்த அவர் 2 மணி நேரத்திற்கு பிறகு அபுதாபியில் தரையிறங்கியுள்ளார். லக்கேஜ் வைத்திருக்கும் பகுதி திறக்கப்பட்டதும் அதில் அந்த லோடுமேன் இருந்ததை கண்டு அபுதாபி விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த அதிகாரிகள் பின்னர் அதே விமானத்தில் அவரை மும்பைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story