குளியலறையில் கூட மக்களை சந்தித்த முதல் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் தான் - அரவிந்த் கெஜ்ரிவால்


குளியலறையில் கூட மக்களை சந்தித்த முதல் முதல்-மந்திரி  சரண்ஜித் சிங் தான் - அரவிந்த் கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 16 Dec 2021 6:01 PM IST (Updated: 16 Dec 2021 6:01 PM IST)
t-max-icont-min-icon

குளியலறையில் கூட மக்களை சந்தித்த முதல், முதல்-மந்திரி சரண்ஜித் சிங் தான் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. டெல்லியில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகிறது.

இதனால், அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி பஞ்சாப் சென்று வருகிறார். அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் மாநில ஒவ்வொரு பெண்களுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான திட்டத்தை அறிவித்தார்.

இதனால் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆடிப்போனது. 

இந்தநிலையில் பஞ்சாப் பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

உலக வரலாற்றிலேயே குளியலறையில் கூட மக்களை சந்தித்த முதல், முதல்-மந்திரி சரண்ஜித் சிங் தான். குளியலறை நேரம் உட்பட 24 மணி நேரமும் மக்களை சந்திப்பதாக சரண்ஜித் சிங் பேட்டியளிப்பதை நான் பார்த்தேன் என்றார்.

Next Story