மேற்கு வங்காளத்தில் ரூ.1.4 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்
மேற்கு வங்காளத்தில் ரூ.1.4 கோடி மதிப்பிலான போதை பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது.
சிலிகுரி,
மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், சந்தேகத்திற்குரிய வகையிலான 2 பெண்கள் மற்றும் ஆண் ஒருவரிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இதில் 700 கிராம் எடை கொண்ட ரூ.1.4 கோடி மதிப்பிலான பிரவுன் சுகர் எனப்படும் போதை பொருள் கைப்பற்றப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த போதை பொருள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது. எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது பற்றிய விவரங்கள் போலீசாரின் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.
Related Tags :
Next Story