இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை : நடிகர் சோனு சூட்டிடம் துப்பாக்கி பரிசாக பெற்றவர்


இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை : நடிகர் சோனு சூட்டிடம் துப்பாக்கி பரிசாக பெற்றவர்
x
தினத்தந்தி 17 Dec 2021 9:27 AM IST (Updated: 17 Dec 2021 9:27 AM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கி சுடும் விராங்கனை கோனிகா லாயக், தற்கொலை செய்து கொண்டார்.


தேசிய வீராங்கனை கோனிகா லாயக் ஜார்கண்ட் மாநில ரைபிள் சாம்பியன்ஷிப் போட்டியில்  தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றவர் .ஜார்க்கண்டை சேர்ந்த  26 வயதாகும் இவர் சொந்தமாக துப்பாக்கி வாங்க வசதி இல்லாத சூழ்நிலையில்   இரு முறை தேசிய அளவிலான போட்டிகளில் விளையாட முடியாமல் போனது.

இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலானது .இதனை அறிந்த நடிகர் சோனு சூட்  2.70  லட்சம் மதிப்புள்ள ஜெர்மன் துப்பாக்கியை பரிசாக அளித்தார்.

இந்நிலையில்  கோனிகா லாயக்,  திடீரென்று  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தி  வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் தற்கொலை செய்து கொள்ளும் 4-வது துப்பாக்கி சுடும்  நபர் இவர் என்பது  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி வருகிறது.

Next Story