பாஜக - மம்தா பானர்ஜி ஒரே கனவையே காண்கின்றனர்; ஆர்.எஸ்.எஸ். சார்பு வார நாளிதழில் வெளியான கட்டுரை


பாஜக - மம்தா பானர்ஜி ஒரே கனவையே காண்கின்றனர்; ஆர்.எஸ்.எஸ். சார்பு வார நாளிதழில் வெளியான கட்டுரை
x
தினத்தந்தி 17 Dec 2021 11:38 AM IST (Updated: 17 Dec 2021 11:38 AM IST)
t-max-icont-min-icon

பாஜகவும், மம்தா பானர்ஜியும் ஒரே கணவையை காண்கின்றன என்று ஆர்.எஸ்.எஸ். சார்பு வாரநாளிதழில் கட்டுரை வெளியாகியுள்ளது.

கொல்கத்தா,

தேசிய அரசியலில் பாஜகவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியாக திரிணாமுல் காங்கிரசை முன்னிறுத்த அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார்.

இதற்காக தேசிய அரசியலில் தனது கட்சியின் தளத்தை விரிவுபடுத்தும் வேலையிலும், காங்கிரசுக்கு மாற்று சக்தியாக தங்களை முன்னிறுத்தும் வேலையிலும் மம்தா பானர்ஜி இறங்கியுள்ளார். 

இந்நிலையில், பாஜகவும், மம்தா பானர்ஜியும் ஒரே கணவையை காண்கின்றன என்று ஆர்.எஸ்.எஸ். சார்பு வாரநாளிதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக மேற்குவங்காளத்தில் செயல்படுவரும் ஆ.எஸ்.எஸ். அமைப்பின் சார்பு வாரநாளிதழான ஸ்வத்திகாவில் ’வரலாற்றை அழிக்கும் நடவடிக்கையில் மம்தா ஏன் குறியாக உள்ளார்? முதலீட்டை ஈர்க்கவா? அல்லது சோனியாவை அழிக்கவா? என்ற தலைப்பில் கட்டுரை வெளியானது. அதில், பிரதமர் மோடியை சமீபத்தில் மம்தா பானர்ஜி சந்தித்தை மையமாக கொண்டு, அவரின் நிலைப்பாடு மாடுபடுகிறது. இது முன்பிருந்த மம்தா பானர்ஜி இல்லை. 

காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பது நரேந்திரமோடியின் கனவு. மம்தா பானர்ஜியும் தற்போது அதேகனவை காண்கிறார் என நினக்கிறேன். அந்த கனவை விற்பனை செய்வதற்காகவே வரலாற்றை அழிக்கும் முயற்சியில் மம்த பானர்ஜி ஈடுபட்டுள்ளார்’ என அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவும், மம்தா பானர்ஜியும் ஒரே கனவை காண்கின்றனர் என ஆர்.எஸ்.எஸ். சார்பு இதழில் செய்தி வெளியாகியுள்ள நிகழ்வு 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே கூட்டணியை ஏற்படுத்தும் முதல் முயற்சியாக இருக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.  

Next Story