டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி
டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
டெல்லி
உலகம் முழுவதும் தற்போது ஒமைக்ரான் தொற்று பாதிப்பு பெரும் அச்சுறுத்தலாக மாறி வரக்கூடிய நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஓமைக்ரான் தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது .
இந்நிலையில் டெல்லியில் மேலும் 10 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .இதனால் டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது .மேலும் பாதிக்கப்பட்ட 20 பேரில் 10 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்ட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்
Related Tags :
Next Story