காதலிக்கு கிறிஸ்மஸ் பரிசு அளிக்க முயன்று போலீசிடம் சிக்கிய நபர்...


காதலிக்கு கிறிஸ்மஸ் பரிசு அளிக்க முயன்று போலீசிடம் சிக்கிய நபர்...
x
தினத்தந்தி 17 Dec 2021 7:22 PM IST (Updated: 17 Dec 2021 7:22 PM IST)
t-max-icont-min-icon

காதலிக்கு கிறிஸ்மஸ் பரிசு அளிக்க புதுசாக யோசித்த காதலர் போலீசில் சிக்கி கொண்டார்.

புதுடெல்லி,

டெல்லியில் சரோஜினி நகர் பகுதியில் கடந்த 14ந்தேதி லேப்டாப், மொபைல் போன் மற்றும் ஸ்கூட்டி ஆகியவற்றை சிலர் திருடி சென்றுள்ளனர்.  இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.  அதில், பரபரப்பு தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சம்பவத்தில் பொருட்களுடன் தொடர்புடைய நபரை கட்டி போட்டு விட்டு, அவருடைய ஸ்கூட்டி உள்ளிட்டவற்றை 3 பேர் கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர்.  அந்த 3 பேரில் ஒருவர் தனது காதலிக்கு கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசு அளிக்க விரும்பியுள்ளார்.

அதற்கு பணம் தேவைப்பட்டு உள்ளது.  ஆனால், பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்துள்ளார்.  இதனை தொடர்ந்து, திருட்டில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளார்.  இந்த சம்பவத்தில், விசாரணை நடத்தி குறைந்த நேரத்தில் குற்றவாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story