அமேசான் நிறுவனத்திற்கு ரூ.202 கோடி அபராதம்
அமேசான் நிறுவனத்திற்கு ரூ.202 கோடி அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி,
பியூச்சர் ரீடைல் நிறுவன முதலீடு தொடர்பான வழக்கில் அமேசான் நிறுவனத்திற்கு ரூ.202 கோடி அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதலீடு தொடர்பான தகவல்களை முழுமையாக அளிக்காமல் மறைத்த புகாரில் அமேசான் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்திற்கு அளித்த அனுமதியையும் நிறுத்தி வைத்துள்ளது. அடுத்த 60 தினங்களுக்குள் விரிவான படிவத்தை அமேசான் சமர்பிக்க வேண்டும் எனவும் இந்திய போட்டி ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Related Tags :
Next Story