அசாம்: ரயிலில் அடிபட்டு இறந்த யானை குட்டி
அசாம் மாநிலத்தில் ரயிலில் அடிபட்டு யானை குட்டி உயிரிழந்தது.
அசாம்,
அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள மரியானி மலைத்தொடரின் கீழ் உள்ள பெலகுரி, என்ற இடத்தில் யானைக்குட்டி ஒன்று ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது.
வனத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமார் 6 முதல் 7 மாத வயதுடைய ஆண் யானை குட்டி ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் மோதியுள்ளது.
கிப்பன் வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வனத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், புதுடெல்லி-திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் யானை குட்டி மீது மோதியது கண்டுபிடிக்கப்பட்டது.
குட்டி யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று வனத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 5 யானைகள் ரயில்களில் சிக்கி உயிரிழந்துள்ளன.
Related Tags :
Next Story