புதுடெல்லி: செல்போன் பறிப்பின்போது பெண்ணை ரோட்டில் இழுத்துச்சென்ற திருடர்களில் ஒருவர் கைது


புதுடெல்லி: செல்போன் பறிப்பின்போது பெண்ணை ரோட்டில் இழுத்துச்சென்ற திருடர்களில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2021 2:03 AM IST (Updated: 18 Dec 2021 2:03 AM IST)
t-max-icont-min-icon

புதுடெல்லியில் செல்போன் பறிப்பின்போது பெண்ணை ரோட்டில் இழுத்துச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி:

டெல்லியின் சாலிமார் பாக் பகுதியில் ஒரு பெண் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது ஸ்கூட்டியில் வந்த இருவர், திடீரென அப்பெண்ணிடம் இருந்த செல்போனைப் பறிக்க முயன்றனர். உடனடியாக அப்பெண் செல்போனை கெட்டியாக பிடித்துக்கொண்டார். 

இதனால் திருடர்கள் செல்போனுடன் சேர்த்து அப்பெண்ணை நடுரோட்டில் சிறிது தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளனர். அவர் கீழே விழுந்த நிலையில் திருடர்கள் ஸ்கூட்டியில் தப்பிச் சென்றுவிட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் நடந்த செல்போன் பறிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் பயன்படுத்திய ஸ்கூட்டி பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். செல்போன் திருடர்களால் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டபின் வீடு திரும்பினார்.

Next Story