சமாஜ்வாதி கட்சி தேசிய பொதுச்செயலாளர் வீட்டில் ரெய்டு...!
சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் வீட்ட்ல் வருமானவரித்துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான ராஜீவ் ராய் வீட்டில் இன்று வருமானவரி சோதனை நடத்தி வருகின்றனர்.
சாமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் நெருங்கிய உதவியாளர் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தனது வீட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை நடத்தி வருவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராஜீவ் ராய், இது வருமான வரிசோதனை. நான் மீது எந்த குற்றப்பின்னணி இல்லை. கருப்பு பணமும் இல்லை. நாம் மக்களுக்கு உதவி செய்தேன். அரசுக்கு அது பிடிக்கவில்லை. அதன் விளைவு தான் இது. நீங்கள் எதாவது செய்தால் அவர்கள் வீடியோவாக எடுத்து வழக்குப்பதிவு செய்வார்கள். தேவையில்லாமல் நீங்கள் தான் அந்த வழக்கை சந்திக்க வேண்டும். அவர்களின் நடவடிக்கை முடிவடையட்டும் இதில் எந்த பயனும் இல்லை’ என்றார்.
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story