வேலையில்லா திண்டாட்டம்; பிரதமரின் தவறான முடிவுகளே காரணம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு


வேலையில்லா திண்டாட்டம்; பிரதமரின் தவறான முடிவுகளே காரணம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Dec 2021 12:32 AM IST (Updated: 19 Dec 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழக்க பிரதமர் மோடியின் தவறான முடிவுகளே காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

லக்னோ,

விலைவாசி உயர்வை கண்டித்து உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச மாநில தலைவர், முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, வேலையில்லா திண்டாட்டம் பற்றி பிரதமர் மோடி பேச மாட்டார் எனவும், இளைஞர்கள் வேலை இழக்க பிரதமரின் தவறான முடிவுகளே காரணம் எனவும் கூறினார். மேலும் பிரதமரின் சில முடிவுகளால், நடுத்தர வர்க்கத்தினரும், ஏழைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். 

Next Story