தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதி 6 பேர் பலி


தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதி 6 பேர் பலி
x
தினத்தந்தி 19 Dec 2021 12:35 AM IST (Updated: 19 Dec 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தனர்.

தெலுங்கானாவின் ஐதராபாத்தை சேர்ந்த சிலர் ஒரு காரில் கமாரெட்டி மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தனர். இந்த கார் ஜெகநாத்பள்ளி அருகே சென்றபோது அந்தவழியாக சென்று கொண்டிருந்த லாரி ஒன்றில் பயங்கரமாக மோதியது.

இதில் கார் அப்பளம் போல நொறுங்கியதுடன், அதில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் பன்ஸ்வடாவில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story