சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி நானாவதி மரணம்


சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி நானாவதி மரணம்
x
தினத்தந்தி 19 Dec 2021 1:35 AM IST (Updated: 19 Dec 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

கோத்ரா கலவரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனில் இடம்பெற்றிருந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி நானாவதி மாரடைப்பால் குஜராத்தில் உயிரிழந்தார்.

சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 1995-ம் ஆண்டு முதல் 2000 வரை நீதிபதியாக இருந்தவர் கிரிஷ் தகோர்லால் நானாவதி. இவர் இதய ெசயலிழப்பு காரணமாக ேநற்று பகல் 1.15 மணியளவில் குஜராத்தில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 86.

1935-ம் ஆண்டு பிறந்த நானாவதி, 1958-ல் மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக தனது பணியை தொடங்கினார். 1979-ல் குஜராத் ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதியானார். ஒடிசா மறறும் கர்நாடகா ஐகோர்ட்டுகளில் தலைமை நீதிபதியாகவும் இவர் பணியாற்றி உள்ளார்.

குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா கலவரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனில் இடம்பெற்றிருந்த இவர், 2014-ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். 1984-ல் நடந்த சீக்கிய கலவரம் குறித்து விசாரிக்க ேதசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைத்த விசாரணை கமிஷனுக்கும் தலைவராக இருந்தார்.


Next Story