இந்தியா சீரான முன்னேற்றத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது - அமித்ஷா பேச்சு


இந்தியா சீரான முன்னேற்றத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது - அமித்ஷா பேச்சு
x
தினத்தந்தி 19 Dec 2021 4:41 AM IST (Updated: 19 Dec 2021 4:41 AM IST)
t-max-icont-min-icon

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனாவால் குறைந்த பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மும்பை,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 2 சுற்றுப்பயணமாக நேற்று மராட்டியம் வந்தார். ஷீரடி சாய்பாபா கோவிலில் சாமி தாிசனம் செய்த அவர், மும்பையில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றிலும் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

உலகில் பல நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றன. அந்த நாடுகளை போல அல்லாமல் பிரதமர் மோடி தொற்றுக்கு எதிரான அரசின் போராட்டத்தில் மக்களும் பங்கு பெறுவதை உறுதி செய்து இருக்கிறார். தற்போது பல நாடுகள் கொரோனவுக்கு எதிராக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகின்றன. ஆனால் இந்தியா சீரான முன்னேற்றத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வருகிறது.

இந்திய மக்கள் தொகை, மருத்துவ உள்கட்டமைப்புகளை பார்த்து உலக நாடுகள் கவலை அடைந்தன. ஆனால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனாவால் குறைந்த பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது. தற்போது பொருளாதார வளர்ச்சி ஒற்றை இலக்கத்தில் உள்ளது. ஆனால் வரும் மார்ச் மாதத்திற்குள் இது இரட்டை இலக்கமாக மாறும் என உறுதி அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story