ஆர்.எஸ்.எஸ். பாஜகவினர் மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறார்கள் - பிரியங்கா காந்தி பேட்டி


ஆர்.எஸ்.எஸ். பாஜகவினர் மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறார்கள் - பிரியங்கா காந்தி பேட்டி
x
தினத்தந்தி 19 Dec 2021 5:22 PM IST (Updated: 19 Dec 2021 5:29 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவினர் மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறார்கள் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

ரேபரேலி,

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில்  ரேபரேலி தொகுதியில் மக்களுடன் சந்திப்பு மற்றும் தீவிர பிரச்சாரத்தில்  பிரியங்கா காந்தி ஈடுபட்டு வருகிறார். 

இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி,

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் மதத்தின் பெயரால்  அரசியல் செய்கிறார்கள். அவர்கள் செல்லும் பாதை நீதி நேர்மை இல்லாதது. அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும், 

நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்து மதம் கற்பிக்கிறது. இந்த வேறுபாட்டைத்தான் ராகுல்காந்தி மக்களுக்கு எடுத்து காட்ட முயற்சிக்கிறார்.  இவ்வாறு பிரியங்கா காந்தி விளக்கம் அளித்தார்.

ராகுல்காந்தியின் 'இந்துத்துவாவாதி' கருத்து குறித்து பிரியங்கா காந்தி கூறினார்.

Next Story