நாகலாந்து: மருத்துவப்பொருட்களை நீண்டதூரம் கொண்டுசென்ற டிரோன்
இந்தியாவில் முதன்முதலில் டிரோன் மூலம் மிக நீண்ட தூரம் மருத்துவப்பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
நாகலாந்து,
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் ஐ-டிரோன் திட்டம், டிசம்பர் 14 அன்று நாகாலாந்தின் மொகோக்சுங்கில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் டிரோன் மூலம் தொலைதூர இடங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை கொண்டுசெல்வதே ஆகும்.
இதன் மூலம் போக்குவரத்து நிறைந்த சாலைகளில் பயணம் செய்து நேரத்தை வீணடிக்காமல் உரிய நேரத்தில் மருத்துவப்பொருட்களை கொண்டுசெல்ல முடியும். இந்த நிலையில் நாகலாந்தின் மொகோக்சுங்கில் இருந்து ட்யூன்சாங்கிற்கு டிரோன் மூலம் மருத்துவப்பொருட்கள் கொண்டுசெல்ல முடிவுசெய்யப்பட்டது. அதன்படி இரு நகரங்களுக்கு இடையேயான 40 கிலோமீட்டர் வான்வழி தூரத்தை டிரோன் 28 நிமிடங்களில் கொண்டுசென்றது. இதன்மூலம் இந்தியாவில் முதன்முதலில் டிரோன் மூலம் மிக நீண்ட தூரம் மருத்துவப்பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகலாந்து முதல் முதலமைச்சர் கூறும்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் நாகலாந்து அரசு இணைந்து பொது சுகாதார நடைமுறைகளின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது என்று கூறினார்.
Related Tags :
Next Story