கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு..!
கர்நாடக மாநிலத்தில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனாவை தொடர்ந்து அதன் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பல மாநிலங்களில் தொடர்ந்து பரவி வருகிறது.
கடந்த 2-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் முதன்முதலாக 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒமைக்ரான் தொற்று மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என பரவியது. நேற்று வரையில் நாடு முழுவதும் 143 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த 5 பேரும் தர்வாத், பத்ரவதி, உடுப்பி, மங்களூரு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story