இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 150- ஐ தாண்டியது


இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 150- ஐ தாண்டியது
x
தினத்தந்தி 20 Dec 2021 10:30 AM IST (Updated: 20 Dec 2021 10:30 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.

புதுடெல்லி,

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை. கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என பரவியது. 

இந்நிலையில், இந்தியா முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது. 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. மராட்டியத்தில் 54, தலைநகர் டெல்லி 22, தெலுங்கானா 20, ராஜஸ்தான் 17, கர்நாடகா 14, குஜராத் மற்றும் கேரளா 11, ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் தலா ஒன்று என மொத்தம் 153 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.


Next Story